சமூக ஊடக நிறுவன அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை

சமூக ஊடக நிறுவனங்களின் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. இந்த நிலையில், சமூக ஊடகங்களான முகநூல், வாட்ஸ்அப், டிக்டாக், ட்விட்டர், கூகுல் உள்ளிட்ட முக்கிய சமூக வளைதள நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், தேர்தல் ஆயத்த பணிகள் மற்றும் தேர்தல் விதிமீறல்கள் உள்ளிட்ட தகவல்களை பெறுவது குறித்தும், சர்ச்சையை உண்டாக்கும் தகவல் மற்றும் படங்களை உடனடியாக நீக்குவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

Exit mobile version