இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள வணிக வளாகத்தில் இருந்து மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறும் காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்தநிலையில், சுலவேசி தீவில் நேற்று மாலை திடீரென மிகப்பெரிய அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் வணிக வளாகத்தின் கடையில் இருந்து பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். கடையில் உள்ள பொருட்களும் கீழே விழுந்தன.
இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. கடந்த மாதம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 2 ஆயிரம் பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.