ஆரணி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளரை ஒருமையில் பேசிய வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கர் கடந்த 8ஆம் தேதி கைது செய்யப்பட்டு கடந்த 26ஆம் தேதி பிணையில் விடுவிக்கப்பட்டார். பின்னர் ஆரணி டவுன் எல்லையில் இருந்து ஊர்வலமாக சென்ற மாவட்ட செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், போலீசாரை ஒருமையில் பேசி கோஷமிட்டனர். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் மாவட்ட செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 9 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள மாவட்ட செயலாளார் பாஸ்கர் உள்ளிட்டோரை 7 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Discussion about this post