அதிக பயணிகளை ஏற்றிசென்ற தனியார் பேருந்து உரிமம் ரத்து

திண்டுக்கல்லில் விதிமுறைகளை மீறி அதிக பயணிகளை ஏற்றி சென்ற தனியார் பேருந்தின் உரிமத்தை ரத்து செய்து போக்குவரத்து கழக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். நியூஸ் ஜெ செய்தி எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் இருந்து சின்னாளப்பட்டி மார்க்கமாக நிலக்கோட்டைக்கு நேற்று சென்ற தனியார் பேருந்தின் பின்புறத்தில் அதிகளவிலான கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. நியூஸ் ஜெ தொலைக்காட்சியிலும் இந்த செய்தி ஒளிபரப்பானது.இதையடுத்து அந்த தனியார் பேருந்தின் உரிமத்தை ரத்து செய்த போக்குவரத்து அதிகாரிகள் பேருந்தையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்த பேருந்தை இயக்கிய ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் உரிமத்தையும் அதிரடியாக ரத்து செய்து திண்டுக்கல் போக்குவரத்து துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Exit mobile version