கேரளாவில் மோதிய வேகத்தில் தீப்பிடித்து எரிந்த பேருந்து, லாரி

கேரளாவில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் இரண்டும் தீப்பற்றி எரிந்ததில் 34 பேர் காயத்துடன் உயிர்த் தப்பினர்.

கேரள மாநிலம் கிளிமானூரிலிருந்து கொட்டாரக்கரை நோக்கி சென்றுக் கொண்டிருந்த மாநில அரசு பேருந்து மீது லாரி ஒன்று மோதியது. வாய்க்கால் என்னும் இடத்தில் நிகழ்ந்த இந்த விபத்தின் போது லாரியின் டீசல் டேங்க் வெடித்ததில் பேருந்தும் தீப்பற்றி எரிய துவங்கியது. பேருந்திலிருந்து அனைவரும் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் 30 பேருக்கு லேசான காயமும் 4 பேருக்கு படுகாயமும் ஏற்பட்டன. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் லாரியும் பேருந்து முற்றிலுமாக எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தன.

Exit mobile version