பரோட்டா 1 ரூபாய்,பிரியாணி 10 ரூபாய்…எங்க தெரியுமா..?

பெரியகுளம் அருகே புதிதாக திறக்கப்பட்ட ஓட்டலில் ஒரு ரூபாய்க்கு பரோட்டாவும், பத்து ரூபாய்க்கு பிரியாணியும் வழங்குவதால் அக்கடையில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

பிரியாணி என்ற சொல்லின் அர்த்தம் அதை ரசித்து ருசித்து உண்ணும் பிரியாணி லவ்வர்களுக்கு மட்டும் தான் தெரியும். அவர்களை ஏங்க வைக்கும் ஒரு விஷயமாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே புதிதாக திறக்கப்பட்ட நான்-வெஜ் ஓட்டலில் ஒரு ரூபாய்க்கு பரோட்டாவும், பத்து ரூபாய்க்கு பிரியாணியும் விற்கப்படுகிறது.

புதிதாக திறக்கப்பட்ட கடை என்பதால் பல சலுகைகளை கொடுத்து மக்களை தங்கள் கடைக்கு வரவைத்துள்ளனர்.அதில் முக்கியமாக ஒரு ரூபாய் பரோட்டா , 10 ரூபாய் பிரியாணி ஆஃபரை கேட்ட அப்பகுதி மக்கள் அந்த ஓட்டலுக்கு குவிய தொடங்கினர். இந்த தகவல் சாப்பாடு பிரியர்களுக்கு பரோட்டா சாப்பிடுவதா.. ? பிரியாணி சாப்பிடுவதா…? என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version