இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதில் இங்கிலாந்து பின்னடைவு

இந்தியாவுடனான உறவை மேம்படுத்த இங்கிலாந்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்ற குழு அறிவுறுத்தியுள்ளது.

இங்கிலாந்திடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இருநாடுகளும் பரஸ்பரம் நட்பு நாடுகளாகவே இருந்து வருகின்றன. இந்தநிலையில் சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதில் இங்கிலாந்து பின்னடைவை சந்தித்திருப்பதாக அந்நாட்டின் நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் சர்வதேச சந்தை 3 மடங்கு வேகத்தில் வளர்ந்து வருவதாக சுட்டிக் காட்டியிருப்பதுடன், 1998-99 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் 2-வது வர்த்தக கூட்டாளியாக இருந்த இங்கிலாந்து தற்போது 17-வது இடத்திற்கு பின் தங்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவுடனான உறவை மேம்படுத்த ஏதுவாக இங்கிலாந்தில் இந்தியர்கள் கல்வி கற்க மற்றும் வேலை செய்வதற்கான நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதிகார சீனாவைவிட, ஜனநாயக நாடான இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதற்கு இங்கிலாந்து அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version