ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தக திருவிழாவை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். தமிழ் நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டு குழுமத்தின் சார்பில் 27ம் தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது. 200 அரங்கங்களில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளமொழிகளில் சுமார் ஒரு கோடி புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடத்தப்படும், இந்த புத்தகத் திருவிழாவில். எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெறும். 2017 மற்றும் 2018ம் ஆண்டில் வெளியான சிறந்த நூல்களுக்கு கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம் உட்பட 10 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. திருவிழாவில் அனைத்து புத்தகங்களும், 10 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.