முதலமைச்சர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர விசாரணை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக இன்று அதிகாலை ராமசந்திரன் என்பவர் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து முதலமைச்சரின் இல்லத்தில் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இன்று அதிகாலை 5.51 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட ராமசந்திரன் என்பவர் முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி தொடர்பை துண்டித்து விட்டார். இதையடுத்து முதலமைச்சரின் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. போலியான அழைப்பை மேற்கொண்ட ராமசந்திரனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version