சமூக வலைத்தளங்களில் மதவெறியைத் தூண்டும் வகையில் பதிவு செய்த பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர் கல்யாணராமன் என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். பாஜக பிரமுகர்களில் ஒருவரான கல்யாணராமன், காக்கைச் சித்தர் கல்யாணராமன் என்ற பெயரில் ஃபேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான ஃபேஸ்புக்கில் கருத்துகளை பதிவிட்டு வருவதாக கல்யாணராமன் மீது பல புகார்கள் சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளது.
இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கல்யாணராமன் ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டுள்ள புகாரை உறுதி செய்தனர். பின்னர் கல்யாணராமன் மீது 153ஏ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அகமதாபாத்திலிருந்து சென்னை விமான நிலையம் திரும்பிய கல்யாணராமனை கைது செய்தனர். இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.