விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ளிமேடு பேட்டை கிராமத்தில் எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். விடியா திமுக ஆட்சியில், தமிழ்நாடு தற்போது போதை மாநிலமாக மாறிவிட்டதாகவும், காவல்துறையின் துணையோடு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமி, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், 2 ஆயிரம் கிளினிக் தொடங்கி வைத்தாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். ஆனால் விடியா திமுக ஆட்சிக்கு வந்ததும், அந்த கிளினிக்கை செயல்படுத்தாமல் மூடுவிழா நடத்திவிட்டு, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை கொண்டு வந்ததுள்ளாதகவும் அவர் குறிப்பிட்டார். இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடி பேர் பயனடைந்துள்ளதாக ஸ்டாலின் கூறி வந்த நிலையில், ஆரம்ப சுகாதார இயக்குநர் அளித்த ஆய்வு அறிக்கையில், அது அப்பட்டமான பொய் என்பது நிரூபணமாகி உள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்மும் தெரிவித்தார்.
Discussion about this post