மதுரை சோழவந்தானில் பிறந்த 4 நாட்கள் ஆன பெண் குழந்தையை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்த சம்பவம் தொடர்பாக, குழந்தையின் தந்தை மற்றும் பாட்டியை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியை சேர்ந்த சித்ரா – தவமணி தம்பதியினருக்கு கடந்த 10ம் தேதி 4வது முறையும் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த நிலையில், பெண் குழந்தை இறந்துவிட்டதாக கூறி, முட்புதர் ஒன்றில் தந்தை தவமணி புதைத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், சோழவந்தான் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள், குழந்தையின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்தனர். அதில், குழந்தை கள்ளிப்பால் ஊற்றி கொலைச் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, குழந்தையின் தந்தை தவமணி மற்றும் பாட்டி பாண்டியம்மாள் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குழந்தையின் தாய்க்கு தெரியாமலேயே கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்துவிட்டு, இயற்கையாக இறந்தது போல் நாடகமாடியது தெரியவந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிறந்து 4 நாட்கள் ஆன பெண் குழந்தை கள்ளிப்பால் ஊற்றி கொலை!
-
By Web Team
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023