உலக தலைக்காய தினத்தை முன்னிட்டு தலைக்கவசத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னையில் மனித சங்கிலி நடைபெற்றது.
சென்னை சேத்துபட்டில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு காவல் துறை சார்பில் நடைபெற்ற இந்த மனிதசங்கிலியில் மருத்துவமனை ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். காவல்துறை சார்பில் நவீன காவல் கட்டுபாட்டு அறையின் துணை ஆணையர் பிரபாகர் கலந்துகொண்டு வாகன ஒட்டிகளுக்கு தலைக்கவசத்தை அணிவித்து தலைக்கவசத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை ஆணையர் பிரபாகர், தலைக்கவசம் அணிதல், சீட் பெல்ட் அணிதல் போன்ற சாலை போக்குவரத்து விதிகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றார். ஹெல்மட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் சிலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவித்தார்.