சேலத்தில் தலைக்கவசம் வாங்கினால் 1 கிலோ வெங்காயம் இலவசம்

நாடு முழுவதும் வெங்காயம் விலை உச்சம் தொட்டுள்ளது.  விலை உயர்வை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.இதனால் வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் சேலம் பழைய பேருந்து நிலையம்  அருகே உள்ள கோட்டை பகுதியில்  தலைக்கவசம் விற்பனை செய்யும்  முகமது காசிம் என்பவர், ஒரு தலைக்கவசம் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என அறிவித்துள்ளார். தற்போது வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், ஒரு தலைக்கவசம் வாங்கினால் 1 கிலோ வெங்காயம் இலவசமாக கிடைப்பதால் இவரது கடையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் தனது கடையில் தலைக்கவசங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Exit mobile version