உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் உள்ள அரசு பள்ளியில் பாதுகாப்பான உணவு உட்கொள்வது குறித்த பாரம்பரிய உணவு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உலக உணவு பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. அந்த வகையில் உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவர்கள் சார்பில் உணவு தானியங்கள் உட்கொள்வது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். இங்குள்ள மகளிர் மேல் நிலைப்பள்ளியில் தொடங்கிய இந்த பேரணியில் பாதுகாப்பு உணவுகள் உட்கொள்வது குறித்து விளக்கி கையில் விளம்பர பதாகைகள் ஏந்தியபடி பொதுமக்களுக்கு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.