காட்டுத் தீ தடுப்புதல் குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம்

கம்பம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்படும் காட்டுத் தீ தடுப்புதல் மற்றும் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. தேனி மாட்டம் கம்பம் அருகே சுருளியாறு மின்நிலையத்தில் மேகமலை வன உயிரினக் கோட்டத்தின் சார்பில் காட்டுத் தீயில் சிக்கியவர்களை மீட்பது குறித்த விழிப்புணர்வு கருத்துகளும் ஒத்திகை நிகழ்ச்சியும் வனக்காப்பாளர் தலைமையில் நடைபெற்றது. அப்போது தீயில் காயம் பட்டவர்களுக்கு எடுக்கப்படவேண்டிய முதல் உதவிகள் குறித்து விளக்கம் செய்யப்பட்டது. இந்த முகாமில் கம்பம், கூடலூர், மேகமலை, வருசநாடு, கண்டமனூர், சின்னமனூர் உள்ளிட்ட பகுதி வனச்சரகரர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர். மேலும் இதில் பொதுமக்களும் அளவில் பங்கு பெற்றனர்.

Exit mobile version