ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் :ஹாலெப்,கார்பின் முகுருசா அரை இறுதிக்கு தேர்வு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், ஹாலெப் மற்றும் கார்பின் முகுருசா ஆகியோர் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி, மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த ஒரு கால்இறுதி ஆட்டத்தில், 4-வது வரிசையில் உள்ள ருமேனியாவின் சிமோனா ஹாலெப்பும், எஸ்டோனியாவின் அனெட் கோண்டா விட்டும் மோதினார்கள்.

இதில் ஹாலெப் 6 க்கு 1, 6 க்கு 1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். 28 வயதான ஹாலெப், கடந்த ஆண்டு விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றினார். 2018-ம் ஆண்டு அவர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்று இருந்தார்.

Exit mobile version