ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ரஃபேல் நடால், ஃப்ரான்ஸஸ் தைஃபோ இன்று மோதல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டியில், ஸ்பெயின் ரஃபேல் நடால் அமெரிக்காவின் ஃப்ரான்ஸஸ் தைஃபோவை இன்று எதிர்கொள்கிறார்.

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது அதன் காலிறுதி சுற்றுகள் தொடங்கியுள்ள நிலையில், தரவரிசையில் 2ஆம் நிலை வீரரும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவருமான ரஃபேல் நடால், அமெரிக்காவின் ஃப்ரான்ஸஸ் தைஃபோவை இன்று எதிர்கொள்ள உள்ளார். 4 வது சுற்றில் பிரபல வீரரான பல்கேரியாவின் டிமிட்ரோவை வீழ்த்தி அனைவரின் கவனத்தை ஈர்த்த தைஃபோ, பிரபல வீரரான நடாலுடன் மோதுவதால் இப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version