ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 100ஆவது வெற்றியை பதிவு செய்த ரோஜர் பெடரர்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 3வது சுற்றில், ரோஜர் பெடரர் தனது 100ஆவது வெற்றியை பதிவு செய்து, 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி, மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3வது சுற்று ஆட்டம் ஒன்றில், 6 முறை சாம்பியன் பட்டம் வென்றவரும், 3ஆம் நிலை வீரருமான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் பெடரர், தரவரிசையில் 47வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜான் மில்மனை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், 4-6, 7-6, 6-4, 4-6, 7-6 என்ற செட் கணக்கில் பெடரர் போராடி வென்றார். இதன் மூலம், ரோஜர் பெடரர் தனது 100வது வெற்றியை ருசித்தார். மேலும், ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் 100 வெற்றிகளைக் கண்ட முதல் வீரர் என்ற சாதனையையும் பெடரர் படைத்துள்ளார்.
 
இதேபோல், பெண்கள் ஒறையர் பிரிவில், பட்டம் வெல்லும் முனைப்பில் இருந்த நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 4வது இடம் வகிப்பவருமான ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா, அமெரிக்காவின் கோகோ காப்பியிடம், 3-6, 4- 6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார்.

Exit mobile version