ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், ரவுனிக், அஷ்லி பர்டி, க்விட்டோவா காலிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், ஜோகோவிச், ரவுனிக், அஷ்லி பர்டி, க்விட்டோவா ஆகிய முன்னணி வீரர், வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

டென்னிஸ் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கு பெற்றுள்ள ஆஸ்திரேலிய ஓபன் தொடர் அண்மையில் தொடங்கியது. இதில், ஆண்கள் ஒற்றையரில் 4-வது சுற்றில் கனடாவின் மிலோஸ் ரவுனிக், குரீஷியாவின் மரின்சிலிகை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே அதீக்கம் செலுத்திய ரவுனிக் 6 க்கு 4, 6க்கு 3, 7க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையரின் மற்றொரு போட்டியில், செர்பியாவின் ஜோகோவிச், அர்ஜெண்டினாவின் ஸ்வார்ட்ஸ்மேனை எதிர்கொண்டார். இதில், 6க்கு 3, 6க்கு 4, 6க்கு 4 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்ற ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறினார்.

Exit mobile version