காஞ்சி அத்திவரதர் பச்சை மற்றும் இளஞ்சிவப்பு பட்டாடையில் செண்பகப் பூ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.
வரதராஜ பெருமாள் கோயிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, நடைபெறும் அத்திவரதர் வைபவம், இந்தாண்டு ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. 34 ஆம் நாளான இன்று, பச்சை மற்றும் இளஞ்சிவப்பு நிற பட்டாடை உடுத்தி, செண்பகப் பூ மலர் மாலைகளுடன் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளித்து வருகிறார்.
ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளதால், இன்று மதியம் 2 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு, கோயில் உள்ளே வந்தவர்கள் மட்டும் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆண்டாள் திருக்கல்யாணம் முடிவடைந்த பிறகு, இரவு 8 மணிக்கு பிறகு மீண்டும் தரிசனம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.