இளஞ்சிவப்பு நிற ஆடையில் பக்தர்களுக்கு காட்சி தரும் அத்திவரதர்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சயன கோலத்தில் உள்ள அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற ஆடையில் பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 வருடங்களுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு தரிசனம் வழங்கும் அத்திவரதர் தரிசன உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பத்தாவது நாளான இன்று இளஞ்சிவப்பு ஆடையில், பஞ்சவர்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு தரிசன நேரம் இன்று முதல் 5 மணி நேரம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை சேவித்து வருகின்றனர். குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் அத்திவரதை எளிதில் வழிபட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version