25-வது நாளான இன்று காஞ்சி அத்திவரதர் மஞ்சள் நிற பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். இந்தநிலையில், 25-வது நாளான இன்று அத்திவரதருக்கு மஞ்சள் நிற பட்டு உடுத்தி பல வண்ண மலர்களால் கோர்க்கப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அதிகாலை முதல் பக்தர்கள் அத்திவரதரை சேவித்து வருகின்றனர்.
நேற்றுவரை 32 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. காவல்துறையினரின் சிறப்பாக நடவடிக்கையால் பக்தர்கள் எந்தவித இடர்பாடும் இன்றி அத்தி வரதரை தரிசித்து செல்கின்றனர்.