வனவிலங்குகளின் தாகம் தணிக்க செயற்கை வனத்தொட்டிகள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளின் தாகம் தணிக்க தண்ணீர் தொட்டிகள் அமைத்து வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் வனக்குட்டைகள் நீரின்றி காணப்படுகின்றன. இதனால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் தேடி நீண்ட தூரம் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 4 புதிய செயற்கை குட்டைகள் அமைக்கப்பட்டு லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பபட்டு வருகிறது. மேலும், தண்ணீர் அருகே குடற்புழு நோயை கட்டுப்படுத்தும் உப்புக்கட்டியும் வைக்கப்பட்டுள்ளது.

இது போன்ற குடிநீர் தொட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளதால் யானைகள், காட்டெருமைகள், மற்றும் மான்கள் தண்ணீர் தேடி கிராமத்துக்கு நுழையும் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன.

இதேபோல், நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் 27 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வனவிலங்கு சரணாலயத்தில் புள்ளிமான், வெளிமான், நரி, குரங்கு, குதிரை, காட்டுப்பன்றி உள்ளிட்ட காட்டுயிர்கள்  உள்ளன. இந்தநிலையில் வனவிலங்குகள் சரணாலயத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள் தண்ணிர் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை போக்கும் வகையில், வனத்துறையினர் நாள்தோறும் டேங்கர் லாரிகள் மூலம் 15,000 ஆயிரம் லிட்டர் தண்ணீரை தொட்டிகளில் நிரப்பி வருகின்றனர். 

Exit mobile version