காஷ்மீரில் இந்திய அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் முடிவு மட்டுமல்ல, 130 கோடி இந்தியர்களின் உணர்வு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாஜக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் குறுகிய காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்களிலேயே பாஜக அரசு, நாட்டை முன்னேற்றப் பாதையில் வழி நடத்தியுள்ளதாக கூறிய மோடி, உலக அரங்கில் இந்தியா தலைநிமர்ந்து செயல்பட்டு வருவதாக கூறினார்.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது மூலம், 130 கோடி இந்தியர்களின் உணர்வை வெளிப்படுத்தியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மோடி, பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஊழல் ஆகியவற்றிலிருந்து காஷ்மீர் மக்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.