சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பணம் வைத்து சூதாடிய 66 பேர் மற்றும் கிளப் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். ஆயிரம் விளக்கு பகுதியில் கியூ ஸ்போர்ட்ஸ் புரமோசன் சோசியல் அசோசியேசன் கிளப் உள்ளது. சென்னை நொளம்பூரை சேர்ந்த ராமு என்பவர் நடத்தி வரும் இந்த கிளப்பில் சட்டத்திற்குப் புறம்பாக பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இது போலீசாரின் சோதனையின்போது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 66 பேரை கைது செய்த போலீசார் அவர்களை ஜாமீனில் விடுவித்தனர். அவர்களிடம் இருந்து 15 சீட்டுக்கட்டுகள் 3 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கிளப்பின் உரிமையாளர் ராமுவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.