வண்ணாரப்பேட்டை நகைக்கடையில் சுமார் 150 கிராம் நகைகள் திருட்டு

சென்னையில் முக்கிய பகுதியில் உள்ள நகைக்கடையில் சுமார் 150 கிராம் தங்கத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் தருண்குமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இதனிடையே நண்பகல் வேளையில், 2 பெண்கள் நகை வாங்குவதாகக் கூறி, கடைக்குள் நுழைந்து பல்வேறு நகைகளை எடுத்து காட்ட கூறியுள்ளனர். பின்னர் அந்த பெண்கள்கேட்ட நகையை காட்டியபோது, சிறிது நேரத்துக்குப் பிறகுத் தமக்கு பிடிக்கவில்லை என்று சொல்லி, கடையில் இருந்து வெளியே சென்று விட்டனர். இதையடுத்து நகையை கடை உரிமையாளரின் தந்தை மிசிறிலால் என்பவர் சரிபார்த்தபோது, 150 கிராம் நகை இருந்த பாக்ஸ் மாயமானது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.5 லட்சம் எனத்தெரிய வந்தது. இதுதொடர்பாக, கடை உரிமையாளர் தருண்குமார் கொடுத்த புகாரின்பேரில், காவல்துறையினர் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து நகைகளை திருடிய 2 பெண்களை தேடி வருகின்றனர்.

Exit mobile version