வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்களை பார்வையிட்ட ஆந்திரா முதல்வர்

மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநிலத்தில், கடந்த சில தினங்களாக பெய்த தொடர் கனமழையால், கோதாவரி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் நதியை ஒட்டி உள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் முழ்கி உள்ளது. போக்குவரத்து மற்றும் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நீரில் மூழ்கிய கிராமங்களை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு கூடுதலாக ஐந்தாயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார்.

Exit mobile version