ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக விற்பனை செய்ய அம்மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.
ஆந்திர மாநில அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால் கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 ஆயிரத்து 700 டன் செம்மரக்கட்டைகளில் 2 ஆயிரத்து 640 டன் செம்மரக்கட்டைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வருவாய் மூலம் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளார்.
Discussion about this post