கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்த செம்மரக்கட்டைகளை ஆன்லைனில் விற்பனை செய்ய ஆந்திர அரசு முடிவு!

andhra sheep logs

ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக விற்பனை செய்ய அம்மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

ஆந்திர மாநில அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால் கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 ஆயிரத்து 700 டன் செம்மரக்கட்டைகளில் 2 ஆயிரத்து 640 டன் செம்மரக்கட்டைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வருவாய் மூலம் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளார்.

Exit mobile version