மயக்கஊசி செலுத்தி யானை இடமாற்றம்

கோவை பெரிய தடாகம் அருகே இடமாற்றம் செவதற்காக விநாயகர் என்ற யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.

கோவை மாவட்டம் தடாகம், பெரிய தடாகம், சின்னதடாகம் மற்றும் ஆனைக்கட்டி பகுதிகளில் காட்டுயானைகள் நடமாடுவது வழக்கம். இந்நிலையில் விநாயகன், சின்னதம்பி என்ற காட்டுயானைகள் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் அளித்து வருகின்றனர். எனவே இந்த யானைகளை இடமாற்றம் செய்யவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனிடையே, பெரிய தடாகம் அருகே விநாயகர் என்ற யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதையடுத்து 4 கும்கி யானைகள் மற்றும் ஜேசிபி உதவியுடன் காட்டுயானையை வாகனத்தில் ஏற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து விநாயகர் யானை முதுமலை பகுதிக்கு இடமற்றம் செய்யப்படவுள்ளது.

Exit mobile version