ஆம்புலன்ஸின் முன் டயர் கழண்டு ஓடிய விபத்தில் 3 பேர் படுகாயம்

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நோயாளியை ஏற்றி சென்ற தனியார் ஆம்புலன்ஸின் டயர் கழன்று ஓடியதால் வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆம்பூர் அடுத்த பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு அவசர ஆம்புலன்ஸ் ஒன்று பெண் நோயாளியை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸின் முன் டயர் கழன்று ஓடியது. இந்த எதிர்பாராத விபத்தில் ஆம்புலன்ஸ் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பெண் நோயாளி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மருத்துவர் என 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பள்ளிகொண்டா காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு வேறு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version