ஹைதராபாத்தை வீழ்த்தி 4-வது இடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ்

ஹைதாராபாத்திற்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் டாசில் வென்ற ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து மும்பை அணியில் ரோஹித்-டிகாக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரோகித் சர்மா 11 ரன்களுக்கும் பின்வந்த சூர்ய குமார் யாதவ் 7 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து களமிறங்கிய மும்பை வீரர்கள், விரைவாக ஆட்டமிழக்கவே மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 46 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 17.4 ஓவர் முடிவில் 96 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்து வீசிய மும்பை அணியின் ஜோசப் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி தரவரிசையில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Exit mobile version