கம்பம் சுருளி அருவியில் நீர்வரத்து குறைய தொடங்கியதையடுத்து அருவியில் குளிக்க விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், பொதுமக்கள் நலன் கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்திருந்தது. தற்போது மழை குறைந்துள்ளதை அடுத்து நீர்வரத்து குறைந்ததால், சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள், சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.