சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 76 மையங்களில் எண்ணப்படும்! – சத்யபிரதா சாகு.

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதா சாகு  , மார்ச் 12ஆம் தேதி முதல் மார்ச் 19ஆம் தேதி வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளை தவிர மற்ற நாட்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் என கூறினார்.

கொரோனா கருத்தில் கொண்டு, வேட்பு மனுத் தாக்கல் செய்யும்போது, வேட்பாளருடன் இரண்டு பேர் மட்டுமே வருவதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 76 மையங்களில் எண்ணப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் இதுவரை 6 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 கிலோ தங்கமும், 23 கோடியே 75 லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும், 76 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் சத்யபிரதா சாகு கூறினார்.

50 சதவீதம் வாக்கு எண்ணும் மையங்களில் வெப் கேமிராக்கள் பொருத்தப்படும் எனக் குறிப்பிட்ட அவர்,

தேர்தல் விதி மீறல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் 24 மணிநேரமும் அளிக்கலாம் என்றும் கூறினார். அனைத்து தொலைபேசி அழைப்புகளையும் பதிவு செய்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

வாக்காளர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வாக்குச்சாவடிக்கு வர வேண்டும் என்றும் ஒவ்வொரு வாக்காளருக்கும் கையுறை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version