நிவாரணப் பணிகளுக்காக அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லாதது -அமைச்சர் ஜெயக்குமார்

நிவாரணப் பணிகள் 70 சதவீதம் முடிவடைந்துள்ளதால் அனைத்துக்கட்சி கூட்டம் என்பது தேவையில்லாதது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் புதுக்கோட்டையில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், புதுக்கோட்டை மாவட்டத்தில், பத்து நாட்களில் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் எனவும், புயல் நிவாரணப் பணிகள் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் தேவையில்லாதது என்றும் கூறினார். 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்ட அவர் தங்களுக்கு எதிராக சதி நடப்பதாகவும், ஆனால் விதி சரியாக இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.

 

Exit mobile version