அனைத்து துறைகளின் வளர்ச்சி குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள அரசு பயணியர் மாளிகையில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டப் பணிகள், நிறைவேற்றப்பட்டுள்ள நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. திட்டங்களை விரைவாக செயல்படுத்தவும், மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. குடிநீர் பிரச்சனையை தீர்ப்பது குறித்தும் அதிகாரிகளுக்கு முதல்வர் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் ரோகிணி மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.