டெல்லியில் காற்று மாசு மோசம் – தேசிய காற்றுத்தர மதிப்பீடு மையம் அறிவிப்பு

டெல்லியில் காற்று மாசு மோசமாக இருப்பதாக தேசிய காற்றுத்தர மதிப்பீடு மையம் தெரிவித்துள்ளது.

டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காற்று மாசை கட்டுப்படுத்துவது என்பது மிகுந்த சவாலான ஒன்றாக உருவெடுத்திருக்கிறது.

இதனால் நேற்று முதல் டெல்லியில் டீசல் ஜெனரேட்டர் பயன்படுத்த கூடாது உள்ளிட்ட தடைகளை அம்மாநில அரசு விதித்துள்ளது. இந்தநிலையில் இன்றும் காற்று மாசு மோசமாக இருப்பதாக சுட்டிக் காட்டியிருக்கும் தேசிய காற்றுத்தர மதிப்பீடு மையம், கட்டுப்பாடுகள் விதித்தும் பயனில்லை என வேதனை தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு மோசமான நிலை தொடரும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version