சபரிமலை கோவில் நடை திறப்பு..தேதி அறிவிப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜைகளுக்காக வரும் பிப்ரவரி 12ஆம் தேதி நடை திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. மாசி மாத பூஜைகளுக்காக வரும் பிப்ரவரி 12ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு 17ஆம் தேதி வரை பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட உள்ளது. அதற்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. நிலக்கல் பகுதியில் பக்தர்களின் வசதிக்காக உடனடி புக்கிங் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக
தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version