ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் பங்குகள் மார்ச் மாதத்திற்குள் விற்பனை: நிர்மலா சீதாராமன்

பொதுத்துறை நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனின் பங்குகள் மார்ச் மாதத்திற்குள் விற்பனை செய்யப்பட்டு விடும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்து அதன் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாயை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுத்துறை நிறுவனங்களான ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் ஆகியவற்றின் பங்குகள் விற்கப்படுகின்றன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பங்குகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு வரும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நடப்பு நிதி ஆண்டின் ஜிஎஸ்டி வரி வசூலில் முன்னேற்றம் ஏற்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version