மெகா ஒப்பந்தம் போட்ட ஏர் இந்தியா !

டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம், பிரான்சின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 சிவில் விமானங்களையும், அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களையும் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. டெல்லியில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன், ரத்தன் டாடா, பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், ஜோதிராதித்யா சிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, புதிய விமானங்களை வாங்குவதற்கான பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து, 250 விமானங்களை ஏர் இந்தியா வாங்கும் ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Exit mobile version