பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

2022-23ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில், வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ள நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 9 புள்ளி 2 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என கணிக்கிடப்பட்டுள்ளது.

2022-23ம் நிதியாண்டில் நாட்டின் பெருளாதார வளர்ச்சி 8 முதல் 8 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் என்றும் கொரோனா தொற்று பாதிப்புகள் விவசாய துறையைப் பெரிய அளவில் பாதிக்காத நிலையில், விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறை சுமார் 3 புள்ளி 9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்றும் மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தொழிற்துறை வளர்ச்சி 11 புள்ளி 8 சதவீதமாக இருக்கும் என்றும் சேவைத் துறை 8 புள்ளி 2 சதவீதம் வளர்ச்சி அடையும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்த பிறகு பட்ஜெட் தாக்கலுக்காக நாடாளுமன்றம் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பதாக மக்களவை சபாநாயர் ஓம் பிர்லா அறிவித்தார்.

Exit mobile version