மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில்,2018-19 ஆம் ஆண்டிற்கான பேருந்துகள் ஒதுக்கீட்டில் ,48குளிர்சாதனப் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளது. இந்த பேருந்துகளின் சிறப்பம்சங்கள் என்ன?
மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் , சாதாரண மக்களும் பயணிக்கின்ற வகையில் குளிர்சாதன பேருந்துகள் விரைவில் இயக்கப்பட உள்ளன. 2018-19 ஆம் ஆண்டிற்கான பேருந்துகள் ஒதுக்கீட்டில் ,48குளிர்சாதனப் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது தயார் நிலையில் உள்ளது.
முற்றிலும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு,மத்திய அரசின் அகில இந்திய மோட்டார் வாகன தரக்கட்டுப்பாடு மையத்தின் பரிந்துரையின் அடிப்படையில்(AIS-052-ARAI) இப் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு பேருந்தின் மதிப்பு ரூ 35,54,556 ஆகும். குறைந்த கட்டணத்தில் பயணிகள் பயணிக்க ஏதுவாக வடிவமைக்க பட்டுள்ளது. நவீன முறையில் ,நல்ல தரத்தில் இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது,இதில் 40 பயணிகள் அமர்ந்த நிலையிலும்,20 பயணிகள் நின்ற நிலையிலும் பயணிக்கலாம். இப் பேருந்தின் உட்புறம் விமானத்தின் உட்புறம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் அடுத்த பேருந்து நிலையம் வருவதை முன் கூட்டியே அறிந்து கொள்ள ஏதுவாக ஒலிபெருக்கி வசதியும் செய்யப்பட்டுள்ளன.
இப்படியாக பல்வேறு நவீன வசதிகளை உள்ளடக்கிய இப்பேருந்து சாமானிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை …