தமிழ்நாட்டில் அஇஅதிமுக தான் மீண்டும் ஆட்சியமைக்கும் என, தன்னார்வு அமைப்புகள் நடத்திய புதிய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, குமுதம் ரிப்போர்ட்டர் நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில், அஇஅதிமுக கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், திமுக கூட்டணி 109 இடங்களை கைப்பற்றும் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன.
“NETWORK DEMOCRACY” மற்றும் “உங்கள் குரல்” என்ற தன்னார்வ அமைப்பு கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில், சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்திய கருத்து கணிப்பில், அஇஅதிமுக கூட்டணி 122 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 111 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் மட்டும் மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 40 இடங்களை அஇஅதிமுக கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
“ஆதான் Media”” நடத்தியுள்ள கருத்துகணிப்பில், அஇஅதிமுக கூட்டணி 130 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என முடிவுகள் தெரிவிக்கின்றன. திமுக கூட்டணி 100 இடங்களில் வெற்றி பெறும் என்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
குடிமராமத்து திட்டம், புதிய மருத்துவக் கல்லூரிகள், டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, பிளாஸ்டிக் தடை, தேசிய அளவில் பெற்ற விருதுகள், பயிர்க்கடன் தள்ளுபடி, பொங்கல் பரிசு உள்ளிட்ட எண்ணற்ற நலத்திட்டங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கை அதிகரித்துள்ளதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
முதலமைச்சர் பயன்படுத்திய “நானும் ஒரு விவசாயி” என்பது மக்களிடையே அழுத்தமாக பதிந்துள்ளதாகவும், “வெற்றி நடை போடும் தமிழகமே” என்ற பாடல் அவரது சாதனைக்கு உரித்தானது என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.