புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அம்மா நினைவிடத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் அண்ணா திமுகவினர் அஞ்சலி செலுத்தி, உறுதிமொழி ஏற்றனர்.
மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள புரட்சித் தலைவி நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக முக்கிய நிர்வாகிகள் புரட்சித் தலைவி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, புரட்சித் தலைவி நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதி மொழி ஏற்றனர். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி மொழி வாசிக்க, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தலைமை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
திமுக அரசின் பொய் வாக்குறுதிகளை கண்டித்து, இனிமேலும் தமிழர்களை ஏமாற்ற விட மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.
உறுதிமொழி ஏற்ற பின் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அண்ணா திமுகவினர் புரட்சித் தலைவியின் நினைவாக மெளன அஞ்சலி செலுத்தினர்.