மின்னகம் ஒப்பந்தம் வெளிப்படையாக நடைபெற்றதா..? என கேள்வி எழுப்பி உள்ள அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், 1912 என்ற புகார் எண்ணை மாற்றுவதற்கான காரணத்தை அரசு விளக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த அதிமுக ஆட்சியில், மின்வாரியம் தொடர்பான புகார்களுக்கு 1912 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டதையும், அதற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு ஒப்பந்த புள்ளி விதிகளுக்கு முற்றிலும் முரணாக, திமுக அரசு மின்னகம் என்ற தனி தளத்தை உருவாக்கி, அதற்கான எண்களை வழங்கிய நிலையில், இதுகுறித்த எந்தவித தெளிவான தகவலும், மின்பகிர்மான நிலையத்தின் இணையதளத்தில் முறையாக அறிவிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதன் காரணமாக ஏற்கனவே பணியில் இருந்த ஒப்பந்த பணியாளர்கள் வேலையை இழந்துள்ளதால், புகார்களை கவனிக்கும் பணியும் மின்வாரிய ஊழியர்களே செய்வதாகவும், அதனால் பராமரிப்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மின்னகம் ஒப்பந்தம் வெளிப்படையாக நடைபெற்றதா..? என கேள்வி எழுப்பி உள்ள அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், 1912 என்ற புகார் எண்ணை மாற்றுவதற்கான காரணத்தை அரசு விளக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
மின்னகம் ஒப்பந்தம் வெளிப்படையாக நடத்தப்பட்டது குறித்து, அதன் விவரங்களையும் வெளிப்படையாக மின்வாரிய இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும், ஏற்கனவே பணிபுரிந்து வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் பணியை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post