முதல்வர், துணை முதல்வரிடம் அதிமுக வேட்பாளர்கள் வாழ்த்து பெற்றனர்

மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் முதல்வர், துணை முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மக்களவை தேர்தலில் அதிமுக 20 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இதுபோன்று சட்டமன்ற இடைத்தேர்தலில் 18 தொகுதிகளிலும் அதிமுக களம் காண்கின்றது. மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Exit mobile version