பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

தமிழகத்தில் இந்த வருடம் தென்மேற்கு பருவ மழை அதிகளவில் பெய்து, நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. தென்மேற்கு பருவ மழை முடிவடைய இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்செரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாருதல், வெள்ளத்தடுப்பு, கால்வாய்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்பான தகவல்கள் அறிக்கையாகவும், Power Point வெளியீடாகவும் தயாரித்து சமர்பிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செலவம், அமைச்சர்கள், செயலர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version