அலப்பற கிளப்புறோம்! தலைவரு நிரந்தரம்! பொதுச்செயலாளர் தலைமையில் கழகத்தின் பொன்விழா எழுச்சி மாநாடு…!
அல்லல் நீக்கும் வள்ளலாய், தமிழகத்திற்கு மாபெரும் கொடையாய் கிடைத்தவர்தான் எளியவர்களின் முதல்வர், விவசாயிகளின் தோழர், கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள். ஊழல் பெருக்கெடுத்து, அராஜகம் ஆறாக ஓடி, குழிப்பறிக்கும் திருட்டு கூட்டமாய் திமுக ஒரு புறம் தொல்லை தர, எதற்கும் அஞ்சோம்! பகைவருக்கும் துஞ்சோம்! என்று கழகத்தினை வீறுநடைபோட்டு அரசியலின் உச்சாணிக் கொம்பில் அமர்த்தியிருக்கிறார் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள். எப்படைத் தோற்கின் இப்படை வெல்லும் என்று அதிமுக தொண்டர்படை அநீதிக்கு எதிராக கூடி கழகத்தின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கான பணியை ஆயத்தமாக்கி வருகின்றனர்.
அதிமுக எனும் மாபெரும் மக்கள் சக்தி!
கழகப் பொதுச்செயலாளரின் போர்படைத் தளபதிகளாய் முன்னாள் அமைச்சர்கள் முன்வந்து மாநாடு தொடர்பான பணிகளை முன்வந்து கவனிக்க, மற்ற கழக நிர்வாகிகள் அவர்களுக்கு தூணாக நின்று தொடர் செயல்பாடுகளை செய்துகொண்டிருக்கிறார்கள். அதிமுக தொண்டர்களைப் பொறுத்தவரை அவர்கள் சுறுசுறுப்பில் தேனிக்கும், வேகத்தில் குதிரைக்கும் சமமானவர்கள். தீய சக்தி எனும் திமுகவை தமிழகத்தில் இருந்து விரட்டுவதற்கு பொதுமக்களும் தயாராகி வருகிறார்கள் திமுகவின் இந்த இரண்டரை ஆண்டு ஆட்சியில் மக்கள் எக்கச்சக்க துன்பத்திற்கு ஆளாகிவிட்டார்கள். பால்விலையில் இருந்து தக்காளி விலை வரை விலைவாசி உயர்ந்துவிட்டது. அத்தியாவசியப் பொருட்களிலேயே கைவைக்கும் இந்த விடியா அரசினை வீட்டிற்கு அனுப்பும் மாநாடாக இந்த மதுரை மாநாடு இருக்கும் என்பது அனைவரின் எண்ணம். அந்த அவா நிச்சயம் நிறைவேறும். அதற்கு கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களும் முன்னாள் அமைச்சர்களும் சான்றாய் இருந்து வென்றெடுப்பார்கள்.
சமூக அநீதி கட்சி திமுக…!
சமூக நீதி தான் எங்கள் கொள்கை என்று ஆட்சிக் கட்டிலில் ஏறி அமர்ந்திருக்கும் விடியா திமுக கட்சியானது, சமூக நீதிக்கு பதிலாக சமூக அநீதியை பொதுமக்களுக்கு செய்துவருகிறது. தமிழத்தில் பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இன்மை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக,புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கழிக்கப்பட்டது, சேலத்தில் பட்டியலின இளைஞர் கோவிலுக்குள் நுழைந்ததைக் கண்டு திமுகவைச் சேர்ந்த ஒருவர் அடித்தது, அதிலும் முக்கியமாக அமைச்சர் பொன்முடி தன் கட்சியைச் சேர்ந்த பெண்மணியைப் பார்த்தே “நீ எஸ்.சி தானமா” என்று கேட்டது. முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் முதுகுளத்தூர் ஒன்றிய ஆணையாளரை ஒருமையில் திட்டியது என்று அவ்வளவு குற்றச்சாட்டுகள் திமுகவின் மீது உள்ளது. அதனாலேயே விடியா திமுகவின் முதல்வர் ஸ்டாலின் “மத்தளத்துக்கு இரண்டு பக்கம் அடியைப் போல் இருக்கிறது எனக்கு” என்று குறிப்பிட்டிருந்தார். தன் சொந்தக் கட்சி அமைச்சர்களிலினாலும், நிர்வாகிகளினாலும் தூக்கத்தைத் தொலைத்து திண்டாடி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
பெண்கள் பாதுகாப்பு சிரிப்பாய் சிரிக்கிறது திமுக ஆட்சியில்..!
சமூக நீதியைத் தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்ணியம் என்று பேசித்திரியும் விடியா திமுகவினர், அந்தக் கொள்கையையும் சரியாக கடைபிடிக்கவில்லை. தன் சொந்தக்கட்சிக்குள்ளேயே பெண்களுக்கான பாதுகாப்பை அவர்களால் உறுதி செய்ய முடியவில்லை. திமுகவின் தென்காசி மகளிர் அணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசினார். இது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவியது. அதேபோல, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் தனது தொகுதிக்குட்பட்ட பெண்ணின் தலையில் அடித்தது. அமைச்சர் பொன்முடி இலவசப் பேருந்து பயணத்தை, பெண்களை நோக்கி “ஓசி பஸ்” என்று கூறியது போன்றவை மிகவும் சர்ச்சைக்குள்ளானது. கொடிதிலும் கொடிது, சென்னை மேயர் பிரியா ராஜனை முதல்வர் ஸ்டாலின் இருக்கையிலே, கையைப் பிடித்து கழக நிர்வாகி இழுத்தார். இது சர்ச்சைக்குரிய பேச்சுப் பொருளாக வளர்ந்தது. ஆனால் இதனை முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை என்பது மட்டும் பட்டவர்த்தனமான உண்மை. பட்டியல் வகுப்பைச் சேர்ந்த பெண்ணை மேயர் ஆக்கிவிட்டோம் என்று மார்தட்டினால் மட்டும்போதாது, மேயருக்கான மரியாதைக் கொடுக்க வேண்டியதே மற்றவர்களின் மாண்பு. ஆனால் இந்த மாண்பு துளி கூட திமுகவில் இல்லை என்பது தான் உண்மை.
யார் நினைத்தாலும் அதிமுகவை அழித்தொழிக்க முடியாது..!
அதிமுக ஆட்சியில் இருக்கும்போது, முன்னாள் சபாநாயகர் தனபாலைத் தாக்கி அவரது நாற்காலியைப் பிடுங்கி சட்டசபையில் அட்டகாசம் செய்தனர் அன்றைய எதிர்க்கட்சியாக இருந்த திமுகவினர். மேலும் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஆட்சியானது ஒரு மாதத்தில் கவிழ்ந்துவிடும், ஒரு வருடத்தில் கவிழ்ந்துவிடும் என்று பேசிப்பேசியே தோற்றுப்போனார்கள். நான்கரை ஆண்டுகள் ஆட்சியைக் கட்டுகோப்போடும், செயல் எண்ணத்தோடும், மக்கள் பணிக்காக அர்பணிப்பு உணர்வோடும் கட்சியையும் தமிழகத்தையும் அமைதி வழியில் கொண்டு சென்றார். எத்தனை துரோகங்கள் வந்தாலும், எத்தனை எதிரிகள் சூழ்ந்தாலும், யார் தடுத்து நிறுத்தி முட்டுக்கட்டை போட்டாலும் அனைத்தையும் தூசாய் தட்டிவிட்டு தமிழகத்தினை இருளில் இருந்து போக்கி, ஒளிப்பாய்ச்சுவதன் முன்னெடுப்பாக இந்த மதுரை எழுச்சி மாநாடு அமைய இருக்கிறது. மதுரை மாநாடு நிச்சயம் அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று நம்புவதில் யாருக்கும் எவ்வித ஐயமும் இருக்காது. ஆளும் விடியா திமுகவினருக்கு மட்டும்தான் ஐயமும், அதிர்ச்சியும் இருக்கும்.