மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்: நடிகர் கமல் ட்வீட்

சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில், கமல்ஹாசன் நடிக்கும் “இந்தியன்-2” படப்பிடிப்புக்கான செட் அமைக்கும்பணி நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், இயக்குநர் சங்கரின் உதவியாளர் மது, உதவி உயக்குநர் கிருஷ்ணா மற்றும் சந்திரன் என்பவர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சுமார் 10 பேர் மருத்துமனைகளில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், “மூன்று சகாக்களை இழந்து நிற்பதாக தெரிவித்துள்ளார். தனது வலியைவிட அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும் என்றும், அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் நலம் பெறுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும் நடிகர் கமல்ஹாசன்” குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, “இந்தியன்-2”  திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் மற்றும் கிரேன் ஆபரேட்டர் ராஜன் என்பவர் மீது 6 பிரிவுகளின் கீழ் நசரத்பேட்டை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Exit mobile version